02.01.23

இன்றைய சிந்தனைக்கு......

புரிந்துணர்வு:

எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட்டு இருப்பதென்றால் தண்டனையிலிருந்து விடுபட்டிருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எதிர்மறையான சூழ்நிலைகள் இருக்கும்பொழுதெல்லாம் நான் மிகவும் எதிர்மறையாக நடந்துகொள்ள முனைகின்றேன். அதிகமான எதிர்மறை எண்ணங்களை கொண்டிருப்பதுடன் அந்த நேரத்தில் அதிகமான சிரமத்தையும் அனுபவிக்கின்றேன். அதன் பின்னர் சூழ்நிலையை குற்றம்சாட்டுவதோடு அதன்காரணமாக தண்டைனையை அனுபவிப்பதாக உணர்கின்றேன்.

செயல்முறை: என்னுடைய சொந்த எதிர்மறை எண்ணங்கள் மூலம் நான் மிக பெரிய தண்டனையை அனுபவிக்கின்றேன் என்ற உண்மையை நான் புரிந்துகொள்வது அவசியமாகும். எந்த அளவிற்கு இவ்விதமான எதிர்மறை எண்ணங்களிலிருந்து நான் என்னை விடுவித்து கொள்கின்றேனோ அந்த அளவிற்கு என்னால் என்னை எவ்வித தண்டனையிலிருந்தும் விடுவித்துக்கொள்ள முடியும்.