02.05.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

தெளிவு:                     

தெளிவு உள்ளவர்வெற்றியுடன் இருக்கின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம் மனதில் நிலையான நோக்கம் இருக்கும்போதும்நம்மை சுற்றி நடப்பவையால் நாம் கவனம் இழக்கின்றோம். ஒரு சிறு எதிர்மறையான அல்லது ஆக்கபூர்வமான நிகழ்வு நம்முடைய எண்ணங்களை திசைதிருப்ப போதுமானதாக இருக்கிறது. நாம் சில நேரங்களில் மிகவும் மும்முரமாக இருப்பதால்நம்முடைய பார்வையானதுமேக மூட்டமுடையதாகஅதாவது தெளிவற்று இருக்கிறது. இதனால் நாம் மேற்கொண்டு முன்னோக்கி செல்வது நின்றுவிடுகிறது.

செயல்முறை:

நான் சாதிக்க நினைப்பதைமனக்கண்களால்நான் கற்பனை செய்து பார்ப்பது அவசியம். மேலும்நான் என் குறிக்கோளை அடையும் வரைஎனக்கு நானே அதை நினைவூட்டிக்கொள்ள வேண்டும். அந்த காரியத்தை செய்து முடிக்க தேவையான, முக்கியமானவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதால்நான் விரைவாக வெற்றி பெறுவேன். மற்ற முக்கியமல்லாத விஷயங்களில் என் கவனம் சிதறாது.