02.06.22

இன்றைய சிந்தனைக்கு

பொறுமை:

உண்மையின் சக்தி, நமக்கு பொறுத்துக்கொள்ளும் ஆற்றலை தருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் கூறுவதை யாராவது நம்பாத போது, நாம் திரும்ப வாதாடி, நம்முடைய கருத்தை நிரூபிக்க முயற்சி செய்கின்றோம். சிறப்பாக முயற்சித்தும், பொதுவாக, நம்மால் மற்றவரை சமாதானப்படுத்த முடியவில்லலை.  நாம் அதிமாக பேசும்போது, குறைவாகவே கேட்கப்படுகின்றோம் என்ற எளிமையான உண்மையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் பொருள், இது முடிவாக நம்மை மேலும் விரக்தியடைய செய்கிறது.

செயல்முறை:

ஒருவர், நான் கூறும் கருத்தில் இருக்கும் உண்மையை சவால்விடும் போது, அதில் நான் திருத்திக்கொள்வதற்கும் அல்லது கற்றுகொள்வதற்கும் ஏதாவது இருக்கின்றதா என நான் சிந்தித்து பார்ப்பது அவசியமாகும். இதை நான் செய்ய ஆரம்பிக்கும்போது, நான் கூற வேண்டியதில் பிடிவாதமாக இருப்பதற்கு பதிலாக அல்லது மற்றவர்களை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக, நான் பொறுமையாக இருப்பது சுலபமாக இருப்பதை காண்பேன்.