02/08/20

இன்றைய சிந்தனைக்கு

கடவுளின் அன்பு உள்ளிருந்து மிகச் சிறந்தவற்றை வெளிகொண்டுவருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து: சம்பூர்ணத்தின் உருவமாக இருக்கும் கடவுள்,  அவருடன் இணைந்திருப்பவருக்கு உத்வேகம் மற்றும் சக்தியின் ஆதாரமாக மாறுகிறார். கடவுளுடனான தொடர்பையும்,  அவருடைய அன்பின் அனுபவத்தையும் கொண்டு,  அமைதி மற்றும் தூய்மையின் உள்ளார்ந்த குணங்களுடன் தொடர்பில் இருப்பது எளிதானது. அனைத்து சூழ்நிலைகளிலும்,  கடவுளின் பிரசன்னம் உள் அழகை வெளிப்படுத்த ஒரு சிறந்த உந்துதலாக மாறுகிறது.

அனுபவம்: நான் கடவுளுடன் ஆழமாக இணைந்திருக்கும்போது,  உள்ளார்ந்த அழகுடன் என்னால் இணைக்க முடிகிறது. கடவுளின் அன்பு என் உள்ளார்ந்த அழகுடன் என்னை மீண்டும் இணைக்க ஆற்றல் மூலமாகிறது. அனைத்து சூழ்நிலைகளிலும் இந்த உள் அழகை என்னால் பராமரிக்க முடிகிறது என்பதை நான் காண்கிறேன். சூழ்நிலைகள் அல்லது மக்களால் நான் எதிர்மறையாக பாதிக்கப்படவில்லை.