02.10.20

இன்றைய சிந்தனைக்கு

 

சுய கட்டுப்பாடு:

உண்மையான ஒழுங்குமுறையானது சுலபமானதும் இயற்கையானதும் ஆகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பொதுவாக ஒழுங்கு முறையை பற்றி பேசும்போதுநம் மீது ஒன்றை கட்டாயப்படுத்துவதாக நாம் சிந்திக்கின்றோம். நம்மில் அதிகமானோர் சுய-கட்டுப்பாட்டு என்பதோடு போராடுகின்றோம்அதாவது அதை வளர்த்துகொள்வதற்கும்பராமரிப்பதற்கும் நாம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது. தேவைப்படுகின்ற சமயங்களில்நம்மை நாம் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள கற்றுக்கொள்கின்றோம். ஆனால் நேரம் கடந்து சென்றவுடன்அல்லது அதற்கான தேவை முடிந்தவுடன்நாம் நம்முடைய வழக்கமான நடத்தைக்கு திரும்புகின்றோம். முயற்சி தேவைப்படுகின்ற காரணத்தால்சுய-கட்டுப்பாடு கடினமாகவும் பாரமாகவும் கருதப்படுகின்றது.

செயல்முறை:

சுய-கட்டுப்பாடு என்பது என் மீது எனக்கு இருக்கும் மரியாதையை வெளிப்படுத்துவது ஆகும். இன்று என்னை எவ்வளவு ஒழுக்கபடுத்திக்கொள்வதை பற்றி நான் சிந்திக்கும்போதுநான் வலிமையுடையவராக ஆகுவேன்.