02.11.23

இன்றைய சிந்தனைக்கு

பணிவுத்தன்மை

நீங்கள் எந்த அளவிற்கு பணிவானவராக இருக்கின்றீர்களோ, அந்த அளவிற்கு நீங்கள் வெற்றியாளராகவும் இருப்பீர்கள்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பணிவுத்தன்மையானது நமக்கு இலேசாக இருப்பதற்கான இறக்கைகளை வழங்குகின்றது. உள்ளார்ந்த நேர்மையின் அடிப்படையில் நமக்கு உற்சாகத்தைக் கொடுத்து, சுலபமாக நம்மை முன்னோக்கிச் செல்ல அனுமதிக்கின்றது. பணிவுத்தன்மை இல்லாதபோது, நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட கடினமான சூழ்நிலைகளால் நாம் திரும்பத் திரும்ப பின்னோக்கிச் செல்வதைக் காண்கிறோம்.

செயல்முறை:

நான் ஏதாவது ஒன்றைச் செய்யும்போது, அதை நான் இரசித்து செய்கின்றேனா என்பதை உறுதி செய்துகொள்வதோடு அந்தச் செயலினால் நான் அடையும் மகிழ்ச்சியையும் நினைவில் கொள்வது அவசியம். இது புகழ் அல்லது அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்ற ஆசைகளிலிருந்து என்னை விடுவிக்கிறது. அதன்பிறகு, நான் மேற்கொள்ளும் எந்தவொரு பணியிலும் நான் வெற்றியடைவதைக் நான் காண்பதோடு, மற்றவர்களும் என்னுடைய முயற்சியைப் பாராட்டுவார்கள்.