02.12.19

இன்றைய சிந்தனைக்கு

நேரம்:

நேரத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்பவர் வெற்றி பெறுகின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் ஒரு காரியத்தில் பணிபுரியும் போது, வெற்றியானது நாம் பெற வேண்டிய அளவிற்கு கிடைகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் நம்மால் நேரம் குறித்த முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொள்ள இயலவில்லை. இதனால் சில நேரங்களில் கவனக்குறைவு ஏற்படுகிறது. இது நம்மை மதிப்புமிக்க நேரத்தை இழக்க செய்து நாம் செய்யும் காரியத்தில் குறுக்கிடுகிறது. அதன்பின் நம்மால் அந்த காரியத்தில் நம்முடைய மிகச் சிறந்ததைக் கொடுக்க இயலாதுள்ளது.

தீர்வு:

நாம் நேரத்தின் முக்கியவத்தை அறிந்துகொள்ள வேண்டும். இதனால் இப்போது நம்மால் செய்ய இயல்வதை நாம் ஒருபொழுதும் தள்ளிப் போட மாட்டோம். அதன்பின் நாம் எப்போதும் நம் மனதில் இப்போது இல்லையேல் இனி ஒருபொழுதும் இல்லை என்ற சுலோகனை வைத்திருப்போம். இப்பொழுது நம்மால் அந்த பணியை செய்ய முடியும் என்பதையும் எதிர்காலத்தில் இந்த அளவிற்கு சிறப்பாக செய்ய இயலாது என்பதையும் நான் அறிந்திருக்கும்போதும், நாம் செய்யும் அனைத்திற்கும் இப்பொழுதே நம்முடைய சிறந்தவற்றை நம்மால் கொடுக்க முடியும். இது நம்முடைய நேரத்தை பயனுள்ள வழியில் பயன்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் வெற்றி மிகவும் எளிதாக நம்மை வந்தடைகிறது.