03.01.19

ஓம் சாந்தி

உண்மை

உண்மைஎளிமையை கொண்டு வருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் உண்மையின் சக்தியை புரிந்து கொள்ளும்போதுவாழ்க்கை எளிமையானதாகிவிடுகின்றது.   பொய்மைசெயற்கையான சிக்கலானவற்றுக்கு மட்டுமே வழிவகுக்கும். நமக்குள் உண்மை சக்தி இருக்கும்போதும் அதன் அடிப்படையில் நாம் வாழும்போதும்வெளிப் பகட்டையோ அல்லது மற்றவர்களின் பாராட்டையோ நாம் சார்ந்து இருக்க மாட்டோம். அதன்பின்னர் வாழ்க்கை எளியதாகி விடும்.

செயல்முறை:

என்னுடைய எதிர்மறையான எண்ணங்களுக்குநான் மற்றவர்கள் மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் தான் காரணம் என்பதை நான் எப்போதாவது கண்டால்எனக்குள் இல்லாத எந்த அம்சத்தை அவர்களிடம் நான் எதிர்பார்க்கின்றேன் என்று என்னை நானே கேட்டுக் கொள்ளவேண்டும்என்னுடைய உள்ளார்ந்த உண்மையோடு என்னை நான் இணைத்துக்கொள்ளும் கலையை நான் அதிகமாக கற்கும்போதுஎன்னுடைய வாழ்க்கையில் சுலபமாக சிக்கலானவற்றிலிருந்து விடுபட்டு இருக்க முடியும்.