03.01.2021

நடைமுறை ஆன்மீகம்

மனதை சுதந்திரமாகவும், லேசாகவும் வைத்திருப்பது விடுப்பட்ட கண்ணோட்டத்தைப் பெறுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

மனதை எதிர்மறை மற்றும் வீனானவைகளின் சுமைகளிலிருந்து விடுவிக்கும்போது, ​​ சுதந்திரமாகவும், லேசாகவும் இருக்கமுடியும். இந்த இலேசானத்தன்மை விரக்தியின் மேகங்களுக்கும் குழப்பமான மலைகளுக்கும் மேலே உயரும் திறனை அளிக்கின்றன. எனவே, அவற்றைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றைக் கடப்பதற்கும் கடுமையாக உழைக்க வேண்டியதில்லை. தன்னிச்சையாகவே விடுப்பட்ட கண்ணோட்டத்தைப் பெறுமுடியும், மேலும் அனைத்து தடைகளையும் எளிதில் புரிந்துகொண்டு கடக்க முடியும்.

 

பயிற்சி:

இன்று நான் எனது சூழ்நிலைக்கு ஒரு பார்வையாளர்களாக இருப்பேன். சூழ்நிலையின் அனைத்து அம்சங்களையும் விடுப்பட்டதன்மையுடன் பார்ப்பேன். அதன்பின் நான் ஒரு இயக்குனராகி, வசனத்தை ஒரு சிறந்த முடிவுக்கு கொண்டு செல்வதற்காக மாற்றுவேன். என்னால் முடிந்த சிறிய பங்களிப்பை கூட நான் செய்ய வேண்டும்.