03.01.23

இன்றைய சிந்தனைக்கு......

எண்ணங்கள்:

எண்ணங்கள் என்ற பொக்கிஷமே மிகப்பெரிய பொக்கிஷம்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நான் எதிர்மறையான அல்லது வீணானவற்றை சிந்திக்கும்போது என்னுடைய எண்ணங்கள் அதிவேகமாக இருக்கின்றன. இத்தகைய எண்ணங்கள் சக்தி வாய்ந்ததாக இல்லை. மறுபுறம் என் எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும் போது, சில சக்தி வாய்ந்த எண்ணங்களே இருக்கின்றன. இத்தகைய எண்ணங்கள் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை உருவாக்குகின்றன.

செயல்முறை:

இன்று நான் என் எண்ணங்களை சோதனை செய்வேன். இன்று நான் ஒரு அழகான எண்ணத்தை உருவாக்கி நாள் முழுவதும் அதை பற்றி சிந்திப்பேன். என்னுடைய வாழ்க்கையில் ஒர் தாக்கம் ஏற்படுத்த எனக்கு சக்தியுள்ளது. நான் ஒரு மாஸ்டர், என்பது ஒரு எளிமையான நேர்மறையான எண்ணம். இது என்னுடைய எண்ணகளின் வேகத்தை குறைத்து என்னை சக்தி வாய்ந்தவர் ஆக்குகின்றது.