03.04.21 

இன்றைய சிந்தனைக்கு

 

பொறுப்பு:

ஒருவர் தன்னுடைய செயல்களுக்கு பொறுப்பேற்றுக்கொள்வது என்பது சுயம் வளர்வதற்கு அனுமதிப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கடினமான சூழ்நிலைகளுக்கு மற்றவர்களை அல்லது சூழ்நிலையை குற்றம் சாட்டுவது சுலபமானதாகும். ஆனால் நாம் அனைத்து நேரங்களிலும் சாக்குபோக்குகளை கூறினால்நம்முடைய சொந்த வளர்ச்சிக்கு ஆதரவாக நம்மால் எதையும் செய்ய முடியாது. வாழ்க்கை தொடர்ந்து போராட்டமாக ஆகுவதோடுசூழ்நிலையின் கட்டுபாட்டுக்குள் இருப்பதாக உணர ஆரம்பிக்கின்றோம்.

செயல்முறை:

என்னுடைய சொந்த வளர்ச்சியை நான் உணர்ந்திருக்கும்போதுஎன்னுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் பற்றிய விழிப்புணர்வு எனக்கு இருக்கின்றது. என்னுடைய நடத்தையை எவ்வாறு அவை பாதிக்கின்றன என நான் அறிந்திருக்கின்றேன். அதன்பிறகுஎன்னுடைய விருப்பங்கள் மற்றும் செயல்களுக்கு என்னால் பொறுப்பேற்க முடிகின்றது. இனி நான் எந்தவொரு சூழ்நிலையின் கட்டுபாட்டுக்குள் இல்லாமல் சுதந்திரமாக உணர ஆரம்பிக்கின்றேன்.