03/07/2020

இன்றைய சிந்தனைக்கு

 

வெற்றி: இதயபூர்வமாக அன்புடன் சேவை செய்வது வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து 

நான் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டி இருக்கும்போதுசில நேரங்களில் நான் கட்டாயத்தின் பேரில் அதனை செய்வதை காண்கின்றேன். அதை செய்வதில் எனக்கு எந்த ஆர்வமும் இருப்பதாக தெரியவில்லை.  ஆனால் சூழ்நிலைகள் அல்லது மனிதர்கள் அதை செய்ய என்னை கட்டாயப்படுத்துவதாக தெரிகின்றது. அதன் பின்னர் நான் செய்வது எனக்கு சந்தோஷமளிக்கவில்லை மேலும் மற்றவர்களுக்கோ அல்லது எனக்கோ அது நன்மையளிக்காமல் இருப்பதை காண்கின்றேன்.

செயல்முறை: நான் மக்களுக்கு உதவி செய்யும் போது அதன் மூலம் மக்கள் என்ன பயன் அடைகிறார்கள் என பார்பதற்கு நான் முயற்சி செய்ய வேண்டும். இந்த  உணர்வுபூர்வமான முயற்சியால் என்னால் மற்றவர்களுக்கு அன்புடன் உதவி செய்ய முடிவதுடன் நான் பாரமான உணர்வு இல்லாமல் இருக்கின்றேன். இதன் காரணமாக என்னுடைய செயல்கள் மேலும் அதிக பயனுள்ள வகையில் இருப்பதை காண்கின்றேன்.