03/09/20

இன்றைய சிந்தனைக்கு

ஒரு தலைவராக இருப்பது என்றால் ஒருவர் முன்மாதிரியாக இருந்து வழிநடத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: எது சரி எது சரி அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால்,  சரியானதன்படி வாழக்கூடியவர்அவருடைய சொற்களிலும் செயல்களிலும் அதைக் காண்பிப்பவர் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர மற்றவர்களை ஊக்குவிக்கக்கூடியவர். பிறருக்கு ஊக்கமளிக்க நிறைய வார்த்தைகள் பேச வேண்டிய அவசியம் இல்லை.

அனுபவம்: என்னுடைய ஒவ்வொரு செயலும் தரமானதாக இருக்கும்போது,  மக்கள் வழிகாட்டுதலுக்காகவும் ஆதரவிற்காகவும் என்னைத் தேடுவதை நான் காண்கிறேன். மக்கள் என்னைப் பார்த்து என்னிடமிருந்து உத்வேகம் பெறும்போது,  நான் பேசுவதும் செய்வதும் எனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் எனது சொற்களிலும் செயல்களிலும் கவனம் செலுத்த முடிகிறது.