03.10.20

இன்றைய சிந்தனைக்கு

 

நேர்மறைதன்மை:

நேர்மறைதன்மையின் சக்தியை பயிற்சி செய்வது என்றால் எதிர்மறைதன்மையிலிருந்து விடுபட்டு இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் எப்பொழுதெல்லாம் ஒரு சூழ்நிலையில் நேர்மறையாக சிந்திக்க வேண்டுமோ அப்போதுநாம் மனதை அவ்வழியில் சிந்திப்பதற்கு கட்டாயப்படுத்த முயற்சிக்கின்றோம். நாம் ஆசைப்படுவதை சிந்திக்குமாறு மனதை கட்டாயப்படுத்துகின்றோம்ஆயினும் மனதால் அம்முறையில் சிந்திக்க இயலவில்லை. அதனால் அங்கு நேர்மறையான விளைவு இல்லாததால் நாம் அதிகமான எதிர்மறைதன்மையுடையவராக நம்மை காண்கின்றோம்.

செயல்முறை:

என்னுடைய மனதிற்கு நான் ஒரு தாயாக இருந்துசரியான எண்ணங்களை சிந்திக்குமாறு கற்றுக்கொடுப்பது அவசியமாகும். அனைத்தும் நன்றாக நடந்து கொண்டிருக்கும்போதும்என் மனதை நான் பழக்கப்படுத்துவது அவசியமாகும். தினந்தோறும் ஒரு நேர்மறையான எண்ணத்தை எடுத்துக்கொண்டு அதனோடு நேரத்தை செலவழிப்பது நல்ல முடிவுகளை கொண்டுவரும். இப்பயிற்சியானது தக்க சமயத்தின்போது மனதை கீழ்படிய செய்வதுடன் மிகவும் எதிர்மறையான சூழ்நிலைகளில் கூட நேர்மறையாக இருப்பதற்கு என்னை அனுமதிக்கின்றது.