03.10.21

இன்றைய சிந்தனைக்கு

நேர்மறைதன்மை

ஒரே ஒரு நேர்மறையான எண்ணம், மனதை சக்தி வாய்ந்ததாக ஆக்க முடியும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்மைப்பற்றியோ, மற்றவரை பற்றியோ அல்லது ஒரு சூழ்நிலையை பற்றியோ எதிர்மறையான எண்ணம் நம் மனதில் தோன்றும்போது, மேலும் அதிகமான எதிர்மறையான எண்ணங்கள் பின் தொடர்கின்றன - எடுத்துக்காட்டாக, கடந்தகாலத்தில் தவறாக நடந்த சூழ்நிலைகள் பற்றிய எண்ணங்கள் தோன்றும்போது நாம் எதிர்மறையான எண்ணங்களால் திணறடிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.

செயல்முறை:

நான், மிகவும் எதிர்மறையான சூழ்நிலையிலும் கூட நேர்மறையாக சிந்திப்பதை சவாலாக எடுத்துக்கொள்வது அவசியமாகும். இது மீண்டும் மீண்டும் எதிர்மறையாக சிந்திக்கும் பழக்கத்தை முறியடிக்க எனக்கு உதவி செய்கின்றது. நேர்மறையான எண்ணங்கள், தற்போதைய சூழ்நிலைக்கு தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை; நான் என் மனக்கண்முன் கொண்டுவரும், எந்த ஒரு எண்ணமும், வாழ்க்கையை, மேலும் நேர்மறையான விதத்தில் சிந்திப்பதற்கு என்னை வழிநடத்த கூடியதாக இருக்கவேண்டும்.