03.11.23

இன்றைய சிந்தனைக்கு

அன்பு

உங்களை நீங்கள் நேசித்தால் மட்டுமே உங்களை உங்களால் மன்னிக்கவும் முடியும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

அன்பு, நமக்கு மன்னிக்கும் சக்தியை கொடுக்கின்றது. நாம் நேசிக்கும் ஒருவரை மன்னிப்பது நமக்கு சுலபமாக இருப்பதுபோல, நம்மை நாம் உண்மையாக நேசிக்கும்போது, நம்மால் நம்மை மன்னிக்கவும் முடியும். அதன் பின்னரே, கடந்தகால தவறுகளை பிடித்து வைத்துக்கொண்டிருப்பதற்கு பதிலாக, நாம் கற்பதையும் முன்னேறுவதையும் நம்மால் காண முடியும்.

செயல்முறை :

நான் தவறு செய்வதை நான் கவனிக்கும்போது, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்னை நானே மன்னிக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதை எனக்கு நான் நினைவு படுத்திக்கொள்வேன்.  என்னுடைய தவறுகளிலிருந்து நான் கற்றுக்கொள்வது அவசியம். ஏனென்றால் அவற்றை நான் மறுபடியும் செய்யமாட்டேன்.