03.12.19

இன்றைய சிந்தனைக்கு

சக்தி:

சக்தி வாய்ந்தவன், வெற்றியை பற்றி பேசுவதற்குப் பதிலாக வெற்றிகரமான நடைமுறை ஆதாரத்தை காட்டுகிறான்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக ஒரு காரியத்தை எவ்வாறு செய்வது என்பது பற்றி பேசுவது நமக்கு மிகவும் எளிதானது. அதே அளவிற்கு மற்றவர்களிடம் அதை பற்றி கூறுவதும் வழிமுறைகளை அளிப்பதும் அதை விட எளிமையான காரியம். ஆனால் சக்தி வாய்ந்தவர் வெறுமனே வெறும் வார்த்தைகளால் பேசுவதாலும் அல்லது அவருடைய வெற்றியைப் பற்றி மற்றவர்களுக்கு நிரூபிப்பதாலும் திருப்தி அடைவதில்லை. அவர் வெற்றிகரமாக இருப்பதைப் பற்றி அதிகம் அக்கறை கொண்டுள்ளார்.

தீர்வு:

நாம் எதைப் பற்றி பேசுகின்றோமோ, நம் வாழ்க்கையில் அதை பயன்படுத்துகிறோமா அல்லது நடைமுறை படுத்துகின்றோமா என்பதை சோதிக்க வேண்டும். அப்போது மட்டுமே, நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்போம். அதன்பிறகு நாம் வெற்றியை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நாம் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்பதை நம் வாழ்க்கை வெளிப்படுத்தும். அதன்பிறகு நாம் பலருக்கு உத்வேகம் அளிப்பவராகின்றோம்.