04.01.23

இன்றைய சிந்தனைக்கு......

பொக்கிஷங்கள்:

அகத்தில் ஆரோக்கியமாக இருப்பதென்பது அனைத்து பொக்கிஷங்களையும் சிறப்பான முறையில் பயன்படுத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒரு ஆரோக்கியமான புத்தி எப்போதும் சரியான பாதையை காண்பிப்பதில் ஒரு தாய் போல் செயல்படுகிறது. அகத்தில் வலிமை வாய்ந்தவராக இருக்கும் ஒருவருக்கு அவர் மனதை அன்போடு வழிநடத்தி சரியான பாதையில் அழைத்து செல்லும் இயற்கையான திறனும் உள்ளது. இத்தகைய ஆரோக்கியமான மனநிலை, இயற்கையாக கிடைக்கும் அனைத்தையும் அங்கீகரிப்பதொடு அவற்றை சரியாக பயன்படுத்தவும் ஊக்கமளிக்கிறது.

செயல்முறை:

நான் என்னுடைய மனதை அன்புடன் சரியான திசையில் செலுத்த கற்றுக்கொண்டவுடன் என் மனதை மீண்டும் சரியான சிந்தனைக்கு கொண்டு வருவதற்கு நான் சிரமப்படவில்லை. ஏனெனில் என் மனம் முற்றிலும் சுலபமாகவும் இயல்பாகவும் முழு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மேலும் நான் அதை கட்டுப்படுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தி சிந்திக்கவோ அல்லது குறிப்பிட்ட வழியில் சித்திக்காமல் இருக்கசெய்ய தேவையில்லை.