04.02.19

 

இன்றைய சிந்தனைக்கு

 

சுய-மரியாதை :

சாதாரணமான ஒன்றை, சிறப்பானதாக மாற்றுவது என்பது, உண்மையில் அதிர்ஷ்டசாலியாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

அதிர்ஷ்டம் என்பது பொதுவாக, சிறப்பான இடத்தில் இருப்பதற்கான சந்தர்ப்பதை கொண்டிருப்பது அல்லது ஒன்றை விசேஷமாக செய்வது என்று புரிந்துகொள்ளப்படுகின்றது. நாம் எப்போதும் அத்தகைய இடத்தில் இருக்கவோ அல்லது நாம் எப்போதும் விசேஷமான காரியங்களை செய்வதற்கோ சந்தர்ப்பத்தை பெற முடியாது என்பதை வாழ்க்கை காட்டுகின்றது. அந்நேரங்களில், குறைவான அதிர்ஷ்டமுடையவர்களாக நம்மை நாம் கருதக்கூடும்.

செயல்முறை:

என்னை நான் மதிக்கும்போதும், என்னை தனிசிறப்பு வாய்ந்தவனாக ஆக்கும் என்னுடைய பலங்களையும் திறமைகளையும் நான் ஏற்றுக்கொள்ளும்போதும், நான் என்னுடைய உள்ளார்ந்த சுயத்துடன் தொடர்பு கொள்கின்றேன். எனக்குள் நான் கொண்டிருக்கும் சக்தி, நான் செய்கின்ற அனைத்தையும் மிகவும் சாதாரண செயலை கூட- சிறப்பானதாக ஆக்குகின்றது என்பதை நான் உணர்கின்றேன். அப்போது, நான் உண்மையில் அதிர்ஷ்டசாலி ஆகின்றேன்.