04.05.22

இன்றைய சிந்தனைக்கு

உண்மை

உண்மை இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சத்தியம் என்ற படகு அசைந்தாலும் அது மூழ்காது என்றொரு பழமொழி உள்ளது. நாம் சத்தியத்துடன் இருக்கும்போது, சில பின்னடைவுகள் அல்லது அதிருப்தியை அனுபவம் செய்யலாம். ஆனால் நாம் முடிவில் வெற்றி அடைவோம்.

செயல்முறை:

நான் சிரமமான சூழ்நிலைகளை கடந்து செல்லும்போது, என்னுள் இருக்கும் சத்தியத்தை என்னுடைய வெற்றிக்கு வழிவகுக்கும் என்று எனக்கு நானே நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கையானது, ஒவ்வொரு சூழ்நிலையையும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் அணுகுவதற்கு உதவி செய்யும்.