04.06.22

இன்றைய சிந்தனைக்கு

மனஉறுதி:

வெற்றி என்பது மிகச்சரியான முயற்சியின் மூலம் பெறப்படுகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பதற்கு பதிலாக, நமக்கு என்ன கிடைக்கிறது என்பதோடு வெற்றியை தொடர்பு படுத்தி பார்க்கும்  மனப்போக்கு உடையவர்களாக நாம் இருக்கின்றோம். அதனால், நாம் எதிர்பார்த்தவாறு சூழ்நிலைகள் அமையாதபோது, எதிர்மறையான உணர்வுகளோடு வெற்றி கிடைக்காததை தொடர்பு படுத்திக் கொள்கின்றோம். பிறகு, மேற்கொண்டு முயற்சி செய்வதையும் நாம் நிறுத்தி விடுகின்றோம்.

செயல்முறை:

ஒரு காரியத்தில் வெற்றியடைவதற்கு நான் சரியான முயற்சியை மேற்கொள்ளும்போது, என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்வதற்கு முயற்சி செய்கின்றேன். இந்த பங்களிப்பின் காரணமாக, அக்காரியத்தை வெற்றியடைய செய்வதற்கு மற்றவர்களும் அவர்களால் முடிந்தவரை பங்காற்றுவார்கள். வெற்றி பின்தொடர்கிறது. நான் சரியானவற்றை செய்யும்போது, நான் எதிர்பார்த்தவாறு முடிவு இல்லாவிட்டாலும் கூட, நான் தொடர்ந்து சுய-முன்னேற்றத்தை அனுபவம் செய்வேன்.