04.08.22

இன்றைய சிந்தனைக்கு

ஒத்திசைவு

மற்றவர்களை புரிந்துகொள்வதென்றால் அவர்களோடு ஒன்றிணைந்து இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

மற்றவர்களும் நம்மை போன்ற நோக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் கொண்டிருக்க வேண்டும் என நாம் எதிர்பார்கின்றோம். மற்றவருடைய நடத்தை மற்றும் வார்த்தைகள் நாம் பழகியவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டு இருந்தால், அவர்களை புரிந்துகொள்ள நமக்கு கடினமாக இருக்கலாம். நாம் அவர்களைப்பற்றி எதிர்மறையான மனோபாவத்தை வளர்க்கக்கூடும், மேலும் நாம் அவர்களுடன் நன்றாக பழக முடியாததை காணக்கூடும்.

செயல்முறை:

இசை குறிப்புகள் போல, நாம் அனைவரும் வித்தியாசமானவர்கள் என்று நான் அறிந்துகொள்வது அவசியம். என்னால் மற்றவர்களுடன் இணைந்து இருக்கும்போது மட்டுமே, என்னால் அழகான ஸ்ருதியை உருவாக்க முடியும். நான் மற்றவர்களோடு சேர்ந்து பணியாற்றும்போது, அவர்களை புரிந்துகொள்ள கற்றுகொள்கிறேன். இந்த முயற்சியில், நான் என்னைப்பற்றியும் எவ்வாறு என்னுடைய திறமைகளை பயன்படுத்தி மற்றவர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பதைப்பற்றியும் கற்று கொள்வேன்.