04.10.20

இன்றைய சிந்தனைக்கு

 

வெற்றி:

உண்மையான வெற்றி என்பது உள்ளார்ந்த முன்னேற்றத்தை அனுபவம் செய்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

வெற்றி என்பது வெளிப்படையாக தெரியும் லாபம் அல்லது பதவி உயர்வு போன்றவற்றுடன் பொதுவாக தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது. மேலும் வெற்றி என்பது எதுவுமே தவறாக போகாத சீரான நிலை எனவும் புரிந்து கொள்ளப்படுகின்றது. ஆனால்பெரும்பாலும் நம்முடைய முயற்சிகளை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நாம் கடினமாக உழைக்கின்றோம்.

செயல்முறை:

செல்வம் அல்லது வெற்றியினுடைய மற்ற வெளிப்புறமான லாபங்களை சேர்ப்பதைக் காட்டிலும் நம்முள் வெற்றியை அனுபவம் செய்வதே மிகவும் முக்கியமானதாகும். நான் என்னை மேம்படுத்திக்கொள்ளவும்பலவீனங்களை வெற்றிகொள்ளவும் அதிக முயற்சி செய்யும்போதும்நான் வெற்றியடைவேன். நான் வெளிப்புறத்தில் வெற்றியாளராக தெரிவதோ அல்லது மற்றவர்கள் என்னை பற்றி சிந்திப்பதோ ஒரு பொருட்டல்லஏனென்றால் நான் உண்மையான முன்னேற்றத்தை செய்துள்ளேன் என்பதை நான் அறிவேன்.