04.11.23

இன்றைய சிந்தனைக்கு

நேரத்தை நன்றாக பயன்படுத்துதல்

விவேகமுள்ளவராக இருப்பது என்றால், நேரம் என்ற பொக்கிஷத்தை நன்றாக பயன்படுத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்மிடம் இருக்கும் ஸ்தூலமான வளங்களை நாம் நன்றாக அறிவோம். அவற்றை நாம் நன்றாக பயன்படுத்துகின்றோம்.  ஆனால் நாம், நேரம் என்ற வளத்தைப் பற்றி கவனக்குறைவாகவே இருக்கின்றோம். நேரத்தை நன்றாக பயன்படுத்துவது என்றால், ஒரு நாளை திட்டமிட்டு, அத்திட்டத்திற்கு ஏற்றவாறு காரியம் செய்வது என்ற நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றோம்.பெரும்பாலான நேரங்களில், இதை நாம் சமாளித்து விடுகின்றோம். ஆனால், அதிக அளவு நேரம் விரயமாவதை நாம் அனைவரும் காண்கின்றோம்.

செயல்முறை:

நேரத்தை நன்றாக பயன்படுத்துவது என்றால், நேரத்தை நான் எதில் முதலீடு செய்கின்றேன் என்ற விழிப்புணர்வுடன் இருப்பதாகும். நான் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களை உருவாக்குவதில் நேரத்தை முதலீடு செய்யும்போது, நான் அதிக அளவு நேரத்தை சேமிக்கின்றேன். மேலும் இந்த முதலீட்டிலிருந்து சிறந்த இலாபத்தை நான் பெறுவேன் என்பதிலும் உறுதியுடன் இருக்கின்றேன். நான் செய்யும் அனைத்திலிருந்தும் நான் நல்ல பலன் பெறுவதைக் காண்கின்றேன்.