04.12.19

இன்றைய சிந்தனைக்கு

இரக்கம்:

உண்மையான இரக்கம் கொண்டவர் நம்பிக்கையற்றவர்களிலும்கூட நம்பிக்கையூட்டுகிறார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் தேவை இருக்கும் ஒருவரை அல்லது முற்றிலும் எதிர்மறையாக இருப்பவரை, அதாவது முற்றிலும் நம்பிக்கையற்ற நிலையில் இருப்பவரை பார்க்கும்போது, நம்முள் பலவிதமான பரிதாபம் அல்லது வெறுப்பு நிறைந்த எதிர்மறையான உணர்வுகளை மட்டுமே நாம் உணர்கிறோம். இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் எவ்விதத்திலும் உதவுவதில்லை, மக்கள் நம்மிடமிருந்து எவ்வித நன்மையும் பெறாது எவ்வாறு இருந்தார்களோ அவ்வாறே இருக்கிறார்கள்.

தீர்வு:

நாம் மற்றவர்களுக்காக பரிதாபம் அல்லது வெறுப்பை கொண்டிருப்பதற்கு பதிலாக உண்மையான இரக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இரக்கம் கொண்டிருப்பது என்றால் நல்லாசிகளோடு அன்பைக் கொண்டிருந்து அவர்களுக்காக நம்பிக்கையுடனும் இருப்பதாகும். நம்முடைய நம்பிக்கைதான் அவர்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உதவுகின்றது. இந்த வழிமுறைதான் நம்பிக்கையற்ற ஒருவர் மீதும் கூட முன்னேற்றம் கொண்டு வருவதற்கான சிறந்த வழியாகும்.