05.01.23

இன்றைய சிந்தனைக்கு......

இலேசானதன்மை:

வீணான வார்த்தைகளிலிருந்து விடுபட்டு இருப்பவரே லேசாக இருப்பவராவார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில் ஒன்றை விளக்குவதற்கு ஒரு சில வார்த்தைகளே தேவைப்படும்போது, நாம் அவற்றை பற்றி தொடர்ந்து பேசுவதோடு அதை பற்றி நீண்ட நேரம் விவரிக்கின்றோம். நாம் உண்மையாகவே காரியங்களை தெளிவாகுகின்றோம் என சிந்தித்து, தேவைக்கு அதிகமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். இது தேவையானது அல்லது மற்றவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என நமக்கு நாமே நியாப்படுத்திக் கொள்கின்றோம். இந்த வார்த்தைகள் சில சமயங்களில் அடுத்தவரை தொந்தரவு செய்வதோடு நமது உறவுமுறைகளையும் பாழாக்கிவிடுகிறது.

அனுபவம்:

நாம் பேசக்கூடிய வார்த்தைகளை தொடர்ந்து கவனிப்பது அவசியமாகும். நாம் உண்மையாகவே தேவைக்கு அதிகமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றோமா என நாம் சோதிப்பது அவசியமாகும். குறைவாகவும், மெதுவாகவும் இனிமையாகவும் பேசவும் என்ற ஸ்லோகணை நாம் நினைவுபடுத்திக் கொள்ளும்போது நம்முடைய வார்த்தைகள் மற்றவர்களை ஒருபோதும் தொந்தரவு செய்யாது. அதன்பின் நம்முடைய சொந்த மற்றும் மற்றவர்களுடைய லேசானதன்மையை நம்மால் தக்கவைத்துக்கொள்ள முடியும்.