05.02.21

 இன்றைய சிந்தனைக்கு

அன்பு:

மற்றவர்களை மாற்றுவதற்கான ஒரு வழியானது அவர்களை அன்புடன் அணுகுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் மற்றவர்களை நேசிக்கும்போதுஅவர்களுக்காக நாம் நல்லாசிகளை கொண்டுள்ளோம். நம்முடைய சொந்த நன்மைக்காக அன்றி அவர்களுடைய நன்மைக்காக நாம் உதவி செய்ய நினைக்கின்றோம். இந்த சுயநலமற்ற அன்பிற்கு மற்றவர்கள் உடனடியாக பதிலளிபத்தோடு அவர்கள் தங்களை மாற்றிக்கொள்வதையும் நம்மால் காணமுடிகின்றது.

செயல்முறை:

இன்று நான் மாற்றமடைய உதவி செய்ய இருக்கும் ஒரு நபரை பற்றி சிந்திப்பேன். அந்த நபரை மாற்றுவதற்கு சிந்திக்கும் முன்புஅவருக்காக அனைத்து வழிகளிலும் நான் கொண்டுள்ள அன்பை பற்றி சிந்தித்து பார்ப்பது அவசியம்.மற்றவரிடம் நான் விரும்பும் மாற்றத்தின்  நோக்கமானது அவருடைய சொந்த நன்மைக்காக என்றும் என்னுடைய சொந்த சுயநலக் காரணங்களினால் ஊக்குவிக்கப்படவில்லை என்பதையும் நான் உறுதிபடுத்திகொள்ள வேண்டும்.