05.04.21

 

இன்றைய சிந்தனைக்கு

 

கவனம் செலுத்துவது:

கவனம் செலுத்துவது என்றால் தொடர்ந்து வெற்றியாளராக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்மில் பலரும்மிகவும் முக்கியமான காரியங்களை கூட கடைசி நொடிக்கு தள்ளிப்போடும் போக்கை கொண்டுள்ளோம். நம்மால் காரியங்களை பின்னர் செய்துவிடமுடியும்  என நாம் அனுமானிக்கின்றோம். ஆனால் சிலசமயங்களில்எதிர்பாராத விஷயங்கள் தலையிடும்போதுகூடுதல் வேலைப்பளுவினால் அனைத்தும் நிலைகுலைந்து போகின்றது. 

செயல்முறை:

நான் கவனம் செலுத்தும்போதுஎன்னால் முக்கியத்துவத்திற்கு ஏற்ப காரியங்களை வரிசைபடுத்த முடியும். சின்னஞ்சிறு காரியங்களும் கூட பெரிய காரியங்களை போன்றே முக்கியமானதாக இருக்ககூடும் என்பதை நான் புரிந்துகொள்வதால் சரியான நேரத்தில் அவற்றை செய்து முடிப்பதை நான் உறுதி செய்கின்றேன். நான் எதிர்பாராத காரியங்களுக்கும் கூட நேரத்தை ஒதுக்குவதை உறுதி செய்கின்றேன். இதுமன அழுத்தத்தை போக்குவதோடு அனைத்து சூழ்நிலைகளிலும் நான் சிறப்பாக செய்வதற்கு என்னை அனுமதிக்கின்றது.