05.05.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

விவேகம்:

வாழ்க்கையில் வரும் பரிட்சைகளுக்கு தயாராக இருப்பதேவிவேகத்தோடு இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாகநாம்வாழ்க்கையில் வரும் பரிட்சைகளுக்குஅதை எதிர்நோக்கிய பிறகே தயாராகின்றோம். அதன் பிறகு நாம் எவ்வளவு கடினமான முயற்சி செய்தாலும்நம்மால் முழுமையாக தயார் நிலையை அடைய முடியவில்லை. அதனால்முன்னேற்றத்தை அனுபவம் செய்வது கடினமாக இருக்கிறது. எதிர்பார்த்துமுன்கூட்டியே தயார் நிலையில் இருப்பது என்பதுஉள்ளார்ந்த வளங்களை நன்கு பயன்படுத்துவதாகும்.

செயல்முறை:

தொடர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்றால்நான் முன்கூட்டியே சிறப்பான முறையில் தயாராக இருப்பது அவசியம். என்னுடைய கடந்த கால அனுபவங்களிலிருந்து நான் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தால் மட்டுமேஎன்னால் இவ்வாறு தயாராக இருக்கமுடியும். இந்த உள்ளார்ந்த தயார் நிலையினால்வாழ்க்கையில் வரும் பரிட்சைகள் அனைத்தையும் என்னால் எதிர்நோக்கமுடியும். தற்போதைய சூழ்நிலையை கையாளஎனக்கு வேண்டிய அனைத்து ஆயுதங்களும் என்னிடம் இருக்கிறது.