05.05.22

இன்றைய சிந்தனைக்கு

பணிவுத்தன்மை

பணிவுத்தன்மை இருக்குமிடத்தில் பலருக்கு நன்மை உள்ளது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பணிவுத்தன்மை உள்ள ஒருவர், கனிகள் நிரம்பிய மரமானது தலை குனிந்திருப்பது போல, இருக்கின்றார். அவரைச் சுற்றி உள்ள அனைவருக்கும் நன்மை செய்கின்றார். பணிவுத்தன்மையானது அனைத்து சூழ்நிலைகளிலும்  நமக்கு கொடுப்பதற்கு உதவுவதோடு, நாம் கொடுக்கவேண்டியதை, மற்றவர்கள் பெற்றுக் கொள்வதையும் சுலபமாக்குகின்றது.

செயல்முறை:

மற்றவர்களுடன் எனக்கு இருக்கும் அனைத்து தொடர்புகளிலும் எதையாவது எதிர்பார்ப்பதை விட என்னால் என்ன கொடுக்க முடியும் என்று பார்ப்பது மிகவும் முக்கியமாகும். அதன் பிறகு, நான் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளானாலும்கூட, எனக்கு பிரச்சனைகள் எதுவும் இருக்காது. பணிவுத்தன்மையானது என்னை சுலபமாக தலைவணங்க வைக்கின்றது.