05.08.22

இன்றைய சிந்தனைக்கு

திருப்தி

திருப்தியாக இருப்பதென்றால் தானும் மனவருத்தமடையாமல் அல்லது மற்றவர்களையும் மனவருத்தப்பட வைக்காமல் இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில், நம்முடைய நோக்கம் அதுவில்லை என்றாலும், நம்முடைய வார்த்தைகள், செயல்கள் அல்லது நடத்தை மற்றவர்களை மனவருத்தப்பட வைக்கிறது. அந்நேரத்தில், மற்றவர்கள் ஏன் அவ்வாறு மனவருத்தமடைந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள கடினமாக இருக்கலாம். மேலும், அவர்கள் காரணமின்றி மனவருத்தப்படுகிறார்கள் என்று நாம் உணரக்கூடும்.

செயல்முறை:

மற்றவர்கள் என்னால் மனவருத்தப்படும்போது, நான் என்ன செய்தேன் அல்லது கூறினேன், என சிந்தித்து, ஏன் அவ்வாறு நடந்தது என முயற்சி செய்து தீர்வு காண்பது அவசியம். மற்றவர்களிடம் என்னுடைய பாதிப்பு இருப்பதை நான் அறிந்துகொண்டு அதை மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது உண்மையான திருப்தியை கொண்டுவரும்.