05/09/20

இன்றைய சிந்தனைக்கு

திருப்தியாக இருக்கும் ஒருவர் நற்குணங்கள் கொண்டவராக இருக்கின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:  திருப்தியாக இருப்பவர் சுயநலத்திலிருந்து விடுபட்டவராக இருக்கின்றார்,  ஆனால் அவர் உள்ளார்ந்த பொக்கிஷங்களால் சுயத்தை நிரப்பிக்கொள்வதில் அக்கறை கொண்டவர். அத்தகைய நபர் தனது பொக்கிஷங்கள் எப்போதும் நிரம்பி வழிவதை நிச்சயம் செய்கின்றார். எனவே அவரது எண்ணங்கள்,  சொற்கள் மற்றும் செயல்கள் சுற்றியுள்ளவர்களுக்கு தொடர்ந்து நன்மைகளைத் தருகின்றன.

அனுபவம்: நான் எப்போதும் மனநிறைவுடன் இருக்கும்போது,  நான் எப்போதும் என்னை வெற்றிகரமாக அனுபவம் செய்கின்றேன். அனைத்து சூழ்நிலைகளிலிருந்தும் என்னால் எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது,  மேலும் எனது அனைத்து அனுபவங்களையும் முன்னோக்கி நகர பயன்படுத்த முடிகிறது. மேலும் நான் கொடுப்பவனாக மாறுகிறேன். இதனால் என்னைச் சுற்றியுள்ளவர்களின் அன்பையும் நல் வாழ்த்துக்களையும் நான் பெறுகிறேன்,  மேலும் நிலையான முன்னேற்றத்தையும் அனுபவம் செய்ய முடிகிறது.