06.01.2021    

நடைமுறை ஆன்மீகம்

மற்றவர்களின் அடையாளத்திற்கு மதிப்பு கொடுப்பது அவர்களின் ஒத்துழைப்பை வெல்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

உண்மையான தலைமைத்துவம் என்பது ஒருவரின் பணிவுத்தன்மையுடன் மற்றவர்களின் இதயங்களை வெல்வதாகும். பின்னர் அவரால் மற்றவர்களின் மதிபிற்குரிய விஷயங்களை முன்னால் வைக்க முடியும். இதனால், அவரால் மற்றவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களையும் மரியாதையையும் ஈர்க்க முடியும். மேலும், இதன் கூடவே, நன்மையைக் கொண்டு வருவதற்கான பார்வை மட்டுமே அவரிடம் இருக்கும்.

                                      

பயிற்சி:

நான் மக்களிடம் நிகழ்காலத்தில் காணப்படுவதற்கு அப்பால் பார்ப்பேன். நான் தற்பொழுது பார்ப்பது எதிர்மறையாக இருக்கலாம். ஆனால் நான் அவர்களின் ஆற்றலையும் அவைற்றை நல்வழியில் எவ்வாறு ஊக்குவிக்க முடியும் என்பதையும் பார்க்கிறேன். நான் இவ்வாறு செய்யும்போது, ​​அவர்களின் சொந்த திறனை அடையாளம் காண அவர்களுக்கு என்னால் உதவ முடியும். பின்னர் அவர்கள் இந்த திறனை கையில் இருக்கும் பணியில் பயன்படுத்த விரும்புவார்கள். உங்கள் மரியாதை அவர்களின் மரியாதையையும் சம்பாதிக்கிறது,  மேலும் அவர்கள் முழு ஒத்துழைப்பையும் தருகிறார்கள்.