06.01.23

இன்றைய சிந்தனைக்கு......

நம்பிக்கை:

நம்பிக்கை உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்கு உதவுகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்மிடம் பொதுவாக விதியிடம் காரியங்களை ஒப்படைக்கும் போக்கு உள்ளது. எதாவது தவறாக நடக்கும்போது நாம் அதற்காக விதியை குற்றம் சாட்டுகின்றோம். அதன்பின் சூழ்நிலை முழுவதும் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை என நாம் உணர்வது, நம்முடைய சொந்த வாழ்க்கைக்கு நாம் பொறுப்பேற்பதிலிருந்து நம்மை தடுத்துவிடுகிறது. மேலும் மாற்றத்தை கொண்டுவருவதிலும் சூழ்நிலையை மேம்படுத்துவதிலும் நம்மால் எந்த விதத்திலும் பணியாற்ற முடியாமல் இருப்பதை உணர்க்கின்றோம்.

அனுபவம்;

நடந்துகொண்டிருக்கின்ற எந்தவித சூழ்நிலைக்கும் விதியை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக நாம் நம்முடைய எதிர்காலத்திற்கான சொந்த அதிருஷ்டத்தை உருவாக்குவதற்கு நாம் பொறுப்பேற்றுக்கொள்வது அவசியமாகும். நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்கும்போது நம்முடைய சொந்த வாழ்க்கைக்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்வோம். அதன்பின் நம்முடைய் ஒவ்வொரு எண்ணத்தையும் நன்மைபயக்க செய்வதற்கு, நம்முடைய வெற்றிக்கு பங்களித்து, சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நம்மால் பணியாற்ற முடியும்.