06.04.21

 

இன்றைய சிந்தனைக்கு

 

சந்தோஷம்:

நீண்ட காலத்திற்கு நிலைக்க கூடிய சந்தோஷம் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவதிலிருந்து வெளிப்படுகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் செய்கின்ற அனைத்திலிருந்தும் சந்தோஷத்தை எதிர்பார்க்கும் போக்கு நமக்கு உள்ளது. நம்மால் முயற்சியின் முடிவுகளை பார்க்கமுடியாதபோதுஅக்காரியத்தை முடிப்பதற்கு நமக்கு ஊக்கம் இருப்பதில்லை. இந்த மனோபாவம் என்பது நாம் சிறிது காலத்திற்கு சந்தோஷத்தை அனுபவம் செய்யகூடியதாக இருந்தபோதிலும்அது எப்போதும் நீண்ட காலத்திற்கு நீடிக்காது.

செயல்முறை:

உண்மையான நீண்ட காலத்திற்கு நிலைக்க கூடிய சந்தோஷமானது ஒரு குறிப்பிட்ட இலக்கிற்காக  நான் பொறுப்பேற்றுக் கொள்வதிலிருந்து வருகின்றது. நான் சாதிக்க விரும்புவதில் கவனம் செலுத்தும்போது எனக்கு கடினமாக இருக்கின்ற சின்னஞ்சிறு விஷயங்களோ அல்லது உடனடியாக சந்தோஷத்தை கொடுக்காத விஷயங்களோ என்னுடைய வழியில் தோன்றாது. என்னுடைய லட்சியத்தை நோக்கி நான் சந்தோஷமாக பயணிக்கின்றேன்.