06/07/20

இன்றைய சிந்தனைக்கு

 

உண்மையான மாற்றம் அனைவருக்கும்  நன்மை அளிக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒருவர் சரியான முறையில் நடந்துகொள்ளாதிருந்தால்,  வழக்கமாக நாம் அந்த நபரை பற்றி எதிர்மறையான உணர்வுகளை கொண்டிருக்கிறோம். இந்த எதிர்மறையான அணுகுமுறையின் அடிப்படையில் அனைத்து வார்த்தைகளும் செயல்களும் இயல்பாகவே எதிர்மறைதன்மையை உருவாக்குகிறது.  அதற்கு பதிலாக அடுத்த நபர் நன்மை பெற என்ன செய்ய முடியும் என்று பார்பது நல்லது.  புகார்களை அதிகரிப்பது மன அமைதியை தூர எடுத்து ெல்லும்.

செயல்முறை:

தவறு செய்தவருக்கும் நன்மை பயக்கும் ஒரு மாற்றத்தை நான் கொண்டுவரும் போது,  அனைத்து வகையான மக்களோடும் என்னால் சமாதானமாக இருக்க முடிகிறது. ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்துகொள்கிறார் என்பதைபற்றி எனக்கு கவலை இல்லை,  ஆனால் அந்த குறிப்பிட்ட எதிர்மறையை அகற்றுவதற்காக என்ன செய்யப்பட வேண்டும் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. வெறுப்பு நபர் மீது அல்ல ஆனால் எதிர்மறையின் மீது.