06/09/20

இன்றைய சிந்தனைக்கு

ஒத்துழைப்பு அழகையும் வளர்ச்சியையும் தருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து: அனைவரும் மற்றவர்களிடமிருந்து ஒத்துழைப்பை நாடுகிறார்கள்,  ஆனால் மற்றவர்களுடன் ஒத்துழைப்பதில் அழகு உள்ளது. உண்மையான ஒத்துழைப்பு என்பது இதயத்துடன் கொடுக்கப்பட்டு மற்றவர்களின் வாழ்க்கையை சாதகமாகத் தொடுகிறது. இது மற்றவர்களும் ஒத்துழைக்கத் தூண்டுகிறது. இதுதான் ஒருவர் மற்றவர்களுக்கு நீட்டிக்கக்கூடிய உண்மையான உதவி ஆகும்.

அனுபவம்: மற்றவர்களுடன் நான் ஒத்துழைக்கவும்,  அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் முடிந்தால்,  நிபந்தனையின்றி கொடுப்பதன் மகிழ்ச்சியை என்னால் அனுபவம் செய்ய முடிகிறது. நான் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டுள்ளேன்மற்றவர்களிடையே நான் உணரும் வளர்ச்சியை என்னால் அனுபவம் செய்ய முடிகிறது. மற்றவர்கள் எனக்காக மாறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை,  ஆனால் அவர்கள் முன்னேற முடியும் என்பதால் ஆகும்.