06.11.19

இன்றைய சிந்தனைக்கு

உறுதிப்பாடு:

ஒவ்வொரு எண்ணத்திலும் உறுதிப்பாடு என்ற முத்திரையை இடுவது வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எண்ணங்களில் உறுதிப்பாடு இருக்கும்போது, எவ்வாறான தடங்கல்கள் இருந்தபோதிலும் சிறப்பானவற்றை செய்வதற்கான இயல்பு இயற்கையாகவே உள்ளது. அத்தகைய ஒரு நபர் அவர் குறிக்கோளை அடைவதற்கு எந்த சூழ்நிலையும் தடுப்பதில்லை. எனவே எப்போதும் உறுதிப்பாட்டுடன் இருக்கும் ஒருவருக்கு இயற்கையாகவே நிலையான வெற்றி உள்ளது.

தீர்வு:

என் எண்ணங்களில் உறுதிப்பாடு இருக்கும்போது, என்ன நடந்தாலும் நான் பயப்பட மாட்டேன். உண்மையில் தடைகள் உறுதிப்பாட்டை வலுப்படுத்த உதவுகின்றன. நான் ஆரம்பித்து விட்ட ஒன்றை நான் ஒருபொழுதும் நிறுத்திவிட மாட்டேன். உறுதிப்பாடு தான் என் எண்ணங்களுக்கு சக்தியைச் சேர்ப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் எனக்கு உதவுகிறது.