06.11.20

இன்றைய சிந்தனைக்கு

உறுதிப்பாடு:

ஒவ்வொரு எண்ணத்திலும் உறுதிப்பாடு என்ற முத்திரையை இடுவது வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எண்ணங்களில் உறுதிப்பாடு இருக்கும்போதுஎவ்வாறான தடங்கல்கள் இருந்தபோதிலும் சிறப்பானவற்றை செய்வதற்கான இயல்பு இயற்கையாகவே உள்ளது. அத்தகைய ஒரு நபர் அவர் குறிக்கோளை அடைவதற்கு எந்த சூழ்நிலையும் தடுப்பதில்லை. எனவே எப்போதும் உறுதிப்பாட்டுடன் இருக்கும் ஒருவருக்கு இயற்கையாகவே நிலையான வெற்றி உள்ளது.

தீர்வு:

என் எண்ணங்களில் உறுதிப்பாடு இருக்கும்போதுஎன்ன நடந்தாலும் நான் பயப்பட மாட்டேன். உண்மையில் தடைகள் உறுதிப்பாட்டை வலுப்படுத்த உதவுகின்றன. நான் ஆரம்பித்து விட்ட ஒன்றை நான் ஒருபொழுதும் நிறுத்திவிட மாட்டேன். உறுதிப்பாடு தான் என் எண்ணங்களுக்கு சக்தியைச் சேர்ப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் எனக்கு உதவுகிறது.