07.01.19

ஓம் சாந்தி

மரியாதை:

மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்பது, அவர்களுடைய தனிப்பண்புகளை புரிந்துக்கொண்டு பாராட்டுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்முடைய சொந்த எதிர்ப்பார்புகளுக்கும், நற்குணங்களுக்கும் ஏற்றாற்போல் மற்றவர்கள் மாறவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இருப்பினும், பெரும்பாலும், எதுவும் நம்முடைய தேவைக்கு ஏற்ப மாறாமல் இருப்பதை நாம் காண்கின்றோம். இது, வெறுப்பையும் அதிருப்தியையும் உண்டாக்குகின்றது.

செயல்முறை:

என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு நபரும், வித்தியாசமானவர்கள் என்பதை நான் புரிந்து கொள்வது அவசியம்ஒவ்வொருவரும், தனித்தன்மை வாய்ந்தவர்கள்; அற்புதமான குணாதிசயங்களையும் திறமைகளையும் கொண்டவர்கள். நான், மற்றவர்களை இவ்வாறாக பார்க்கும்போது, என்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் மாற வேண்டும் என நான் மேற்கொண்டு எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக, அவர்கள் யார் என்பதை அறிந்து, அவர்களுக்கு நான் மரியாதை கொடுப்பதை காண்கின்றேன்.