07.01.2021

நடைமுறை ஆன்மீகம்

தன்னை தொடர்ந்து சோதித்துக்கொள்பவர் முன்னேற்றத்தை அனுபவம் செய்வார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

தன்னைத் தானே சோதித்துக் கொள்பவரால் தன்னுள் ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியும். அத்தகைய நபர் ஒவ்வொரு சூழ்நிலையையும் புதிதாகக் கற்றுக்கொள்வதற்கும், மேலும் சிறப்பாக செய்வதற்கு சில மாற்றங்களை கொண்டு வருவதற்கும் ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறார். எனவே அவரது வாழ்க்கையில் நிலையான முன்னேற்றம் உள்ளது.

பயிற்சி:

ஏதேனும் தவறு நடக்கும்போது, என்னைச் சரிபார்த்து உடனடியாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நான் கற்றுக்கொள்கின்றேன், நான் நிலையான முன்னேற்றத்தை அனுபவம் செய்கின்றேன். எந்தவொரு சூழ்நிலையும் எனக்குள் எதிர்மறையான உணர்வுகளை ஏற்படுத்தவில்லை அல்லது என்னை நிறுத்தி வைக்கவில்லை,  ஆனால் என் வழியில் வரும் அனைத்திலும்  என்னால் சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடிகின்றது.