07.04.21

 

இன்றைய சிந்தனைக்கு

 

சாந்தம்:

சாந்தமான மனம் மிகச்சரியான தீர்ப்பை கொண்டு வருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எப்பொழுதெல்லாம் ஒரு சவால்மிக்க சூழ்நிலையில் நாம் சரியான தீர்ப்பை எடுக்க வேண்டியிருக்கின்றதோஅப்போது நாம் அச்சத்தோடுநாம் சரியாக தேர்வு  செய்வோமா என்பதை பற்றி கவலையடைய ஆரம்பிக்கும் போக்கு உள்ளது. அம்மனநிலையில் நாம் எடுக்கும் எவ்விதமான முடிவுகளும் தவறாக செல்லும் போக்கு உள்ளது.

செயல்முறை:

சவாலான சூழ்நிலைகளில்நான் எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பும்என்னுடைய மனம் சாந்தமாக இருப்பதை நான் உறுதி செய்து கொள்வது அவசியமாகும். இவ்வாறு செய்ய முடிவதற்குதினசரி வாழ்க்கையில் என்னுடைய மனதை அமைதியாக வைத்திருப்பதற்கு நான் பயிற்சி செய்வது அவசியமாகும். இந்த கலையில் நான் தேர்ச்சி அடைந்தவுடன்என்னால் பல்வேறு சூழ்நிலைகளிலும்மிகவும் சுலபமாக முடிவுகளை எடுக்க முடியும்.