07.05.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

அகத்தாய்வு:      

நன்றாக சிந்திப்பது என்றால்தீர்வு காண்பது என்தாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பிரச்சனைகளை சந்திக்கும்போதுதீர்வு காண கடினமாக முயற்சிக்கின்றோம். தீர்வு சுலபமாக கிடைக்கவில்லை என்றால்கடினமாக சிந்திக்கும் போக்கு நம்மிடம் உள்ளது. நாம் எதிர்நோக்கும் பிரச்சனையில் நாம் மூழ்கியிருப்பதால்நம் சிந்தனையானதுஅதனைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. சிந்தனை அதிகமாக இருக்கும்போதுநாம் தீர்வு காண்பது சாத்தியமல்ல.

செயல்முறை:

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குஎன்னுடைய சிந்தனையின் தரத்தை உயர்த்திக்கொள்வது முக்கியமானதாகும். அமைதியான எண்ணங்களை உருவாக்குவதன் மூலம்மனதை சாந்தமாக வைத்திருப்பது அவசியம். இதனை தெடர்ந்துபிரச்சனைகள் என்னை பாதிப்பது நின்றுவிடுகிறது. என்னால்தெளிவாக சிந்திக்க முடிகின்றது. இது தீர்வைக் கொண்டுவருகிறது.