07.05.22

இன்றைய சிந்தனைக்கு

அன்பு

அன்பு அனைவருடைய வளர்ச்சிக்கும் ஏற்ற சூழலை வழங்குகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக, உறவுமுறைகளில் நாம் நெருக்கமாக பழகுபவர்களிடம் எதிர்பார்பை வளர்த்துக்கொள்கின்றோம். நாம் அவர்களை நேசிப்பதால், நமக்கு அவர்கள் மீது உரிமை இருப்பதாக நாம் கருதுகின்றோம். நம்முடைய எதிர்பார்ப்புகளினால், நாம் மற்றவர் முன்னோக்கி செல்வதற்கான சுதந்திரத்தையோ அல்லது வாய்ப்பையோ கொடுப்பதில்லை.

செயல்முறை:

நான் உண்மையான அன்பை அனுபவம் செய்யும் போது, என்னால் மற்றவர்களுக்கு சரியான சூழலை வழங்க முடியும். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற முடியும். இன்று, நான் நேசிப்பவர்களை, பிடித்து வைத்துக்கொள்ளவோ அல்லது என்னுடைய தேவைகளுக்கு ஏற்ப  அவர்கள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்றோ நான் எதிர்பார்ப்பதற்கு மாறாக, அவர்களுக்கு உண்மையான ஆதரவைக் கொடுப்பேன்.