07/07/20

இன்றைய சிந்தனைக்கு

 

சிறந்த ஒப்பீடு என்பது என்னோடு என்னை ஒப்பிடுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

தன்னைத்தானே ஒப்பிட்டுப் பார்க்கும் ஒருவர்,  அவர் எப்படி முன்னேற்ற முடியும் அல்லது அவர் எப்படி முன்னேற்றமடைந்திருக்கிறார் என்பதைப் பார்க்கிறார். இப்படிபட்ட ஒருவர் அவரது சொந்த வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறார். மாறாக,  தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் ஒருவர்,  தொடர்ந்து சாக்கு போக்குகளை கண்டுபிடிப்பதோடு,  ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு கிடைத்த வாய்ப்புகளை விட்டு விலகியிருக்கிறார்.

செயல்முறை:

நான் சாக்கு போக்குகள் கூறுவதிலிருந்தும் மற்றவர்களுடன் ஒப்பிடுவதிலிருந்தும் விடுபட்டு,  சுதந்திரமாக இருக்கும்போதுமிகவும் சவால்மிக்க சூழ்நிலைகளில் கூட என்னால் லேசாக இருக்க முடிகின்றது. நான் என் சொந்த அல்லது மற்றவர்களுடைய தவறுகளில் சிக்கிக்கொள்ளவில்லை. ஆனால்என் அனுபவங்கள் என்ற புதையலில் என்னால் தொடர்ந்து சேர்க்க முடிகிறது. சந்திக்கும் ஒவ்வொரு புதிய சவாலுடனும் நான் மென்மேலும் செல்வந்தர் ஆகின்றேன்.