07.11.20

இன்றைய சிந்தனைக்கு

விடுதலை:

விருப்பங்களிலுருந்து விடுதலையாகி இருப்பதென்பது வீணானவற்றிலிருந்து விடுபட்டு இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

விருப்பங்களிலுருந்து விடுதலையாகி இருக்கும் ஒருவர் எதிர்பார்ப்புகளிலிருந்து விடுதலை பெற்றவர் ஆவார். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத போதுஅங்கே எது இல்லை அல்லது என்ன இருக்க வேண்டும் என்பது பற்றி அதிகம் சிந்தனை இல்லை. இவ்வகையான வீணான எண்ணங்களிலிருந்து மனம் சுதந்திரம் பெற்றிருப்பதால்என்ன செய்யப்படுகிறதோ அது சிறப்பானதாகின்றது.

தீர்வு:

நான் விருப்பங்கள் அல்லது ஆசைகளிலிருந்து விடுபட்டு இருக்கும்போதுஎன்னால் எப்போதும் திருப்தியாக இருக்க முடிகின்றது. அதன்பிறகு என்னால் என் முன் வரும் அனைத்தையும் பாராட்டவும்அனுபவிக்கவும் முடிகின்றது. மேலும் சூழ்நிலைகள் மற்றும் மக்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்கவில்லை. எனவே மனம்வீணான எண்ணங்கள் மற்றும் கேள்விகளிலிருந்து விடுபட்டு இருக்கிறது.