07.12.19

இன்றைய சிந்தனைக்கு

மரியாதை:

ஆம் என்று கூறுவதென்றால் அனைவருக்கும் மரியாதை கொடுப்பது என்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நமக்கு விரும்பமில்லாத விஷயத்தை யாராவது ஒருவர் நாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும்போது நம் வழக்கமான எதிர் வினையானது, என்னால் இயலாது என்று கூறிவிடுகின்றோம். நாம் அந்த காரியத்தை செய்ய விரும்பாத காரணங்களை அல்லது ஏன் மற்றவர்கள் சொல்வதை நாம் ஒத்துக்கொள்வதில்லை என்பதையும் காரணம் காட்டுகின்றோம். ஆனால் பொதுவாக, நாம் இல்லை என்று கூறிய உடன், அடுத்தவர் நாம் மேற்கொண்டு கூற இருப்பதை கேட்க இயலாமல் இருக்கின்றார்.

தீர்வு:

'இல்லை' என்று கூறுவதற்கு பதிலாக, நாம் 'ஆம்' என்று சொல்ல பழகிக்கொள்ள வேண்டும். ஆமாம் என்று கூறுவதென்றால், மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்வதாகும். அதன் பிறகுதான் நம் வாதத்தை நாம் முன்வைக்க வேண்டும். அதன்பின் மற்றவர்களும் நம் கருத்திற்கு மதிப்பு அளிப்பார்கள். இந்த பயிற்சி மற்றவர்களிடமிருந்து நல்லாசிகளை பெறவும் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் நமக்கு உதவுகின்றது.