08.01.21

உண்மை

உண்மையை நிரூபணம் செய்வது அவசியமற்றது. 

சிந்திக்க வேண்டிய கருத்து:

உண்மை எப்போதும் சரியான இடத்தில்சரியான தருணத்தில் வெளிப்படும். நாம் அதை நிரூபணம் செய்வதற்கு அக்கறை கொள்ள அவசியமில்லை. நாம் நேர்மையாக இருந்துஅவ்வாறு வாழ்வதற்கு மட்டுமே அக்கறை கொள்ள வேண்டும். உண்மையை நிரூபிக்க முயற்சி செய்வது பிடிவாதத்தையே வெளிப்படுத்தும். பெரும்பாலும் இதுநம்மை எதிர்த்து செயல்படும்.

செயல்முறை:

நான் கூறுவதை யாராவது நம்பவில்லை என்றால்நான் அதை உண்மையாகவே நம்புகின்றேனா என்று என்னை நானே கேட்பது அவசியம். அது உண்மை என்ற உறுதி என்னிடம் இருந்தால்நான் அதை மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்ட அக்கறை கொள்ளத் தேவையில்லை. எதையாவது நான் சந்தேகப்படும்போது மட்டுமேநான் அதை அனைவருக்கும் நிரூபிக்க ஆசைப்படுவேன்.