08.01.23

இன்றைய சிந்தனைக்கு......

ஆசீர்வதங்கள்:

ஆசீர்வதங்களுக்கு தகுதியானவராகுவதென்றால் சுலபமாக வெற்றியடைவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சுயத்தின் நன்மையை பற்றி சிந்திப்பது, சிலசமயங்களில் சுயநலத்தின் வடிவமாக மாறிவிடுகின்றது. நாம் சுயநலவாதிகளாக இருக்கும்போது நாம் மற்றவர்களை பற்றியோ அல்லது நம்முடைய செயல்களின் விளைவுகள் அவர்கள் மீது ஏற்படுத்த போகும் பாதிப்புகளை பற்றியோ சிந்திப்பதை நிறுத்திவிடுகின்றோம். அதன்பின் மற்றவர்களுடைய நல்லாசிகளும் ஆசிர்வாதங்களும் நம்முடன் இல்லாததால் நம்மால் லேசானதன்மையுடன் முன்னோக்கி செல்ல இயலவில்லை.

அனுபவம்:

நம்முடைய ஒவ்வொரு செயலும் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தருகின்றனவா என நாம் சோதிப்பது அவசியமாகும். நாம் செய்து கொண்டிருக்கின்ற காரியத்தில் எந்தளவு மற்றவர்களுக்கு நன்மை இருக்கிறதோ அந்தளவு அக்காரியத்திற்கு மற்றவர்களுடைய நல்லாசிகள் இருக்கும். இந்த நல்லாசிகளுடன் நம்மால் வேகமாக முன்னேறி செல்ல முடிவதுடன் சுலபமாக வெற்றி பெறுவோம்.