08.02.19

இன்றைய சிந்தனைக்கு

 

அகிம்சை:

உண்மையான அகிம்சை என்பது, மற்றவர்களை ஒருபோதும் வார்த்தைகளால் கூட  புண்படுத்தாமல் இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்மில் பெரும்பாலானோர், மற்றவர்களை உடல் ரீதியாக காயப்படுத்தாமல் இருக்க அதிகமான முயற்சி செய்கின்றோம். ஆனால் சில சமயங்களில், நாம் மற்றவர்களை, பெரும்பாலும், தற்செயலாக, நம்முடைய வார்த்தைகள் மூலம் புண்படுத்துகின்றோம்.

செயல்முறை: 

இன்று, நான் பேசுவதற்கு முன்னர், என்னுடைய வார்த்தைகளால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி உண்மையாக சிந்திப்பேன். இவ்வார்த்தைகள் எவ்வாறு மற்றவர்களுடைய மனதை பாதிக்கக்கூடும் என்றும் சிந்தித்து பார்ப்பேன். நான் எதிர்மறையான வார்த்தைகளை பேசும்போது, அவை எவ்வாறு என்னைச்  சுற்றியுள்ளவர்களுடைய மனதில் எதிர்மறையான எண்ணங்களை உணரச் செய்கின்றது  என்றும்,  இது எவ்வாறு என்னை மேலும் அதிகமாக பாதிக்கின்றது என்பதையும் நான் கவனிப்பேன்